ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது என்று வயோதிபர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் நான் ஊரின் பெயரையே சொல்லுவதாக இல்லை.
சும்மா ஒரு குறியீட்டுக்காக ஊர் அல்லது கிராமம் என்றே வைத்துக்கொள்ளுவோம். ஊர் அவ்வளவு பின்தங்கியும் இல்லை. அவ்வளவு முன்னேறியும் இல்லை- ஜேர்மனியில் பெண்விடுதலை என்று முழக்கமிடும் அநேகமான குடும்பப் பெண்களைப்போல.
பத்து வருட காலம்.
இந்த ஊரைவிட்டு ஜேர்மனிபோய், இப்போதுதான் மறுபடியும் இந்த ஊரை மிதிக்கவேண்டும் என்ற எனது எண்ணம் நனவாகியுள்ளது.
வியாழன், 18 ஏப்ரல், 2013
கடன்
மூன்று மாதங்களுக்குமேலாக ஊரிலிருந்து கடிதம் வரவில்லை. சனங்கள் என்னபாடுபடுகிறார்களோ தெரியவில்லை. காதுக்கு எட்டும் செய்திகள் பயமுறுத்தித் தினம்தினம் செத்துப் பிழைக்கவைக்கின்றன.
உண்மை எது பொய் எது என்று பகுத்தறிய முடியாத நிலை.
உறக்கம் வெகுநாளாய் மௌனமாகி இடையிடையே வந்து எட்டிப்பார்த்து வேடிக்கை காட்டுகிறது. பயங்கரமான கனவுகள் திகிலூட்டுகின்றன. உணவை நாட மனம் மறுத்தது. வேலை செய்யக்கூட முடியவில்லை.

வியாழன், 11 ஏப்ரல், 2013
யௌவனமில்லாத யதார்த்தங்கள்
கனவுகளுடனும் கற்பனைகளுடனும், யாரிடமோ கடன் வாங்கி, ஜேர்மனியை மிதித்துச் சில காலம் சென்ற பின்புதான் தெரிகிறது- இங்கு வந்தது எவ்வளவு கேவலம் என்று.
'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்பார்கள். சுதாகரைப் பொறுத்தவரையில் அந்த வார்த்தை முற்றிலும் உண்மையானது. ஜேர்மனியிலிருந்த நண்பர்கள் எழுதிய கடிதங்கள் அவனின் கற்பனையைத் தூண்டின.
‘மச்சான்! வெள்ளைக்காரிகளுடன் கைகோர்த்துத் திரியலாம். வேலை எதுவும் செய்யாமல் படுத்திருந்தே காசு சம்பாதிக்கலாம். உடுப்புக்கூட வாங்கத் தேவையில்லை. ஆறுமாதத்துக்கு ஒருமுறை உடுப்பு வாங்கக் காசு தருவாங்கள். ரீவி வாங்கலாம். எப்படியாலும் இங்கே வந்து சேர். சொர்க்கம் சொர்க்கம் என்பார்களே, அது ஜேர்மனிதான்.’

திங்கள், 1 ஏப்ரல், 2013
மனவிகாரங்கள்
குளிரைப் பார்த்துப் பதறியடித்து இலைகளை உதிர்த்துவிட்டுப் பட்டுப்போனவைகளைப் போன்ற தோற்றத்துடன் வீதியின் இருமருங்கும் அமைதியாக நிற்கும் மரங்களை மேலும் பயமுறுத்தும் நோக்கத்துடன் முண்டியடித்து முன்னேறும் வாகனங்கள், சோகத்துடன் குளிரைத் தாங்கும் மரங்களைத் தாண்டி ஆரவாரமாகச் சென்றுகொண்டிருந்தன. குளிரில் இருந்து உடம்பைப் பாதுகாக்கவென வாங்கியணிந்த உடைகளையும் மீறி நடுங்கியவாறு அருகிலிருந்த தேவாலய உச்சியில் தெரிந்த மணிக்கூட்டை அண்ணாந்து பார்த்தான் செந்தில்.
மணி சரியாக 4.50
மின்ரதம் (Electric Train) வர இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கின்றன.

ஞாயிறு, 24 மார்ச், 2013
ஆரம்பம்
வாழ்க்கையே அஸ்தமனமாகிவிட்டதுபோன்ற பிரமை சந்திரனை விழுங்கிய அமாவாசைகளாய் பௌர்ணமியை உதறித் தள்ளிவிடும்போல் இருந்தது. விதியின் கொடியகரங்கள் எந்த உருவத்தில் எதைச்செய்யும் என்று எவருக்குத் தெரியும்?அந்த வரிசையில் பரிமளா விதியின் வஞ்சகத்திற்கு இரையாகிவிட்டாள்.
அடிவயிற்றில் ஏதோ ஒரு பிரளயம். இன்னும் சிறிதுநேரத்தில் பிரளயம் எரிமலையாகிச் சுவாசக்குழாய்கள் வழியாகக்

ஞாயிறு, 10 மார்ச், 2013
அவரும் இவரும்..!
அந்த வானுயர்ந்த மாடிக்கட்டிடத்தின் முன்வாசல் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார் றொபின்சன்.
தனது எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற திடமான நம்பிக்கையுடன் சற்று நேரத்துக்கு முன்பு அந்த வீட்டினுள்ளே சென்றவர், அவை யாவுமே 'பொல, பொல'வென்று பூகம்பத்தால் சின்னாபின்னமாகிச் சிதறுண்ட கட்டிடங்களாகப் பொடிப்பொடியாகிவிட்ட அதிர்வுடன் திரும்பி வந்தார்.

புதன், 6 மார்ச், 2013
அந்தப் பக்கம் பாக்காதை!
''அந்தப் பக்கம் பாக்காதை..."
அவசரமாகக் கூறினான் மகேந்திரன்.
எந்தப்பக்கம் பார்க்க வேண்டாம் என்கிறான்?! பார்க்க வேண்டாமென்றால் பார்க்கத் துடிப்பதும், கேட்கக் கூடாதென்றால் கேட்க முயல்வதும், பேசத் தடை என்றால் பேச விளைவதும்தானே மனித இயல்பு?!
நானும் சாதாரண மனிதன்தானே? பார்க்கத் துடித்தேன். உடனே பார்த்தால், தனது வார்த்தையை மதிக்கவில்லையே என மகேந்திரன் மனதுக்குள் மறுகலாம். அதனால் வேறு திசையில் நோக்க ஆரம்பித்து, அப்படியே அரை வட்டவடிவமாக விழிகளை மெதுவாக அசைத்து அவன் குறிப்பிட்ட பக்கத்தைப் பார்க்கலாம் என்றொரு குறும்புத்தி எண்ணம் சிந்தையில் குறும்பாகச் சிரித்தது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)