டாக்டர்கள் அவனைச் சூழ்ந்தார்கள்.
சோதனைக் குழாய்களில் இரத்தம் எடுத் தார்கள். எக்ஸ்ரேப் படங்களாக
எடுத்துக் குவித்தார்கள். அவனைச் சுற்றிக் கூட்டம் கூட்டமாக நின்று பேசினார்கள்.
’ஏதோ சூட்டால் இரத்த வாந்தி எடுத்திருக்கலாம்!’ என்று நினைத்தவனுக்கு,
மனதில் பயம் இலேசாக எட்டிப் பார்த்தது.
ஆஸ்பத்திரிக்கு வந்து இரண்டு வாரங்களாகிவிட்டன.






