ஞாயிறு, 24 மார்ச், 2013

ஆரம்பம்

வாழ்க்கையே அஸ்தமனமாகிவிட்டதுபோன்ற பிரமை சந்திரனை விழுங்கிய அமாவாசைகளாய் பௌர்ணமியை உதறித் தள்ளிவிடும்போல் இருந்தது. விதியின் கொடியகரங்கள் எந்த உருவத்தில் எதைச்செய்யும் என்று எவருக்குத் தெரியும்?அந்த வரிசையில் பரிமளா விதியின் வஞ்சகத்திற்கு இரையாகிவிட்டாள்.

அடிவயிற்றில் ஏதோ ஒரு பிரளயம். இன்னும் சிறிதுநேரத்தில் பிரளயம் எரிமலையாகிச் சுவாசக்குழாய்கள் வழியாகக்

ஞாயிறு, 10 மார்ச், 2013

அவரும் இவரும்..!

அந்த வானுயர்ந்த மாடிக்கட்டிடத்தின் முன்வாசல் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார் றொபின்சன்.

தனது எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற திடமான நம்பிக்கையுடன் சற்று நேரத்துக்கு முன்பு அந்த வீட்டினுள்ளே சென்றவர், அவை யாவுமே 'பொல, பொல'வென்று பூகம்பத்தால் சின்னாபின்னமாகிச் சிதறுண்ட கட்டிடங்களாகப் பொடிப்பொடியாகிவிட்ட அதிர்வுடன் திரும்பி வந்தார்.

புதன், 6 மார்ச், 2013

அந்தப் பக்கம் பாக்காதை!

''அந்தப் பக்கம் பாக்காதை..."
அவசரமாகக் கூறினான் மகேந்திரன்.

எந்தப்பக்கம் பார்க்க வேண்டாம் என்கிறான்?! பார்க்க வேண்டாமென்றால் பார்க்கத் துடிப்பதும், கேட்கக் கூடாதென்றால் கேட்க முயல்வதும், பேசத் தடை என்றால் பேச விளைவதும்தானே மனித இயல்பு?!

நானும் சாதாரண மனிதன்தானே? பார்க்கத் துடித்தேன். உடனே பார்த்தால், தனது வார்த்தையை மதிக்கவில்லையே என மகேந்திரன் மனதுக்குள் மறுகலாம். அதனால் வேறு திசையில் நோக்க ஆரம்பித்து, அப்படியே அரை வட்டவடிவமாக விழிகளை மெதுவாக அசைத்து அவன் குறிப்பிட்ட பக்கத்தைப் பார்க்கலாம் என்றொரு குறும்புத்தி எண்ணம் சிந்தையில் குறும்பாகச் சிரித்தது.

வியாழன், 25 அக்டோபர், 2012

அன்பின் அளவு

(1991ம் ஆண்டு ஜேர்மனியில் இடம்பெற்ற தமிழ் இளைஞர் ஒருவரின் தற்கொலை இக் கதையின் கருவாகிறது.)

மாயவன் ஜேர்மனிக்கு வந்து ஐந்தாறு வருடங்களாகிவிட்டன. என்னென்ன கற்பனைகளுடன், திட்டங்களுடன் ஜேர்மன் மண்ணை மிதித்தானோ தெரியாது. இன்று பிணமாகக் கிடக்கிறான். சுற்றிலும் நண்பர்களின் கவலை தோய்ந்த முகங்கள். ஒரு சிலர் வெளிப்படையாகவே அழுதார்கள்.

மாயவனா தற்கொலை செய்தான்? என்ற நம்பமுடியாத விசாரணைகள். அவனுக்கு அப்படி என்ன குறை? என்று விடைதேடும் வினாக்கள்.

மாயவனுக்கு இருபத்தைந்து வயதளவில்தான் இருக்கும். தாய் தகப்பன், சகோதரிகள்

இதற்காக இவைகளை..!!

"செல்லமக்கா! உங்கடை நாய் குட்டிபோட்டூட்டுதே?"

"உனக்கு வேறை கதையே இல்லையே.... எப்ப பார்த்தாலும் ஆடு மடிவிட்டூட்டுதே.... நாய் குட்டி போட்டூட்டுதே.... மாட்டிலை எத்தினை போத்தில் பால் கறக்கிறியள் எண்ட கதைதான்" என்று சலிப்புடன் கூறினார் செல்லமக்கா.

"செல்லமக்கா.... வீட்டிலை என்னவாலும் பிரச்சினை கிரச்சினையே? சள்புள்ளெண்டு விழூறியள். நாய் குட்டிபோட்டால் கவனமாய்ப் பாருங்கோ.... பிறக்கிற குட்டியளிலை ஒண்டுக்கு வீரன் எண்டு பேர் வையுங்கோ...."

புதன், 24 அக்டோபர், 2012

நான் தேடிப் பார்க்கிறேன்!

சிரட்டைக் கரிப்பொட்டு நெற்றியை மறைக்க
கள்ளங் கபடமில்லாக் குண்டுமணி விழிகளுடன்

தேசம் கடந்த பின்...!!!

இலங்கைத் தமிழரின் வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால், "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற முதுமொழிக்கேற்ப பொருள் வளத்துக்காகவும் கல்விச் செல்வத்துக்காகவும் தேசத்தைக் கடந்து வேறுநாடுகளுக்குச் சென்றவர்களையும், அங்கே சென்றவர்களில் ஒரு பகுதியினர் அந்தந்த நாடுகளிலேயே தமது வாழ்க்கையை நிரந்தரமாக்கியதையும், மறுபகுதியினர் சென்ற நோக்கத்தில் திருப்தியுற்றவர்களாக மீண்டும் தாயகத்திற்கு வந்து வசதியாகவும்,