நாவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானே - நிறைவங்கம் (20)

வீடே முற்றிலும் மாறிவிட்டது.

சாருவின் முகத்தில் குதூகலப் பொலிவு. துள்ளியோடும் மானாகிவிட்டாள். அதைக் கண்டு அம்மாவுக்கு வாயெல்லாம் பல். கூடியளவு என்னையும் சாருவையும் தனிமையில்விட்டு, பெரிசுகள் ஒதுங்க ஆரம்பித்தார்கள்.

புதன், 15 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 19

கணனித்திரையையே சில வினாடிகள் பார்த்தவள் என்னை நோக்கித் திரும்பினாள். அவளது முகத்தில் நான் எதிர்பார்த்த அதிர்ச்சியோ கவலையோ எதையுமே காண முடியவில்லை. மாறாக ஆச்சரியத்தால் கண்கள் கருவண்டுகளாக உருள நின்றாள்.

"அத்தான்.. இந்தப் போட்டோ எப்பிடி உங்களுக்கு வந்திச்சு..?"

செவ்வாய், 14 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 18

இணையம் வந்த பிறகு உலகம் வெகுவாகச் சுருங்கிவிட்டது என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் அந்தக் கூற்று என்மட்டில் இவ்வளவுதூரம் உண்மையாகும் எனக் கனவிலேகூட நினைத்துப் பார்த்ததில்லை.

உலகம் ஒரு நாடாக, ஊராக, வீதியாக, வீடாகக் குறுகிவிட்டது என்மட்டில். அதற்குச் சான்றாக கணனித் திரையில் அவளது படம்.. லவ்லிபோய் அனுப்பிய அவளது படம் கணனித்திரையில் மிதந்து என் மனதை ஆறா ரணமாக்கி, குருதி ஊற்றை உருவாக்கிக் கொண்டிருந்தது.

திங்கள், 13 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 17

"அண்ணா.."

"ம்.."

"பெட்டைகளை நம்பாதைடா.. பொடியங்களின்ரை உணர்ச்சிகளைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கவெண்டே ஒரு கூட்டம் அலையுது..." என்று அறிவுரை கூறினான் லவ்லிபோய்.

ஞாயிறு, 12 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 16

எனக்குள் புதிதாக ஒரு போராட்டம் ஆரம்பமாகிவிட்டது.

'சாரு என்னை விரும்புகிறாள். அதற்கும்மேலாக அம்மா எங்கள் இணைவை விரும்புகிறாள்..'

தெரிந்த விசயம். எனினும் எனது எண்ணத்தை, நான் சாருவின்மேல் கொண்ட

சனி, 11 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 15

"அண்ணாக்குட்டி! சுகமா இருக்கியா.. பதில்.. பதில்.."

வந்த உடனேயே ஆரம்பித்துவிட்டாள். எனது முடிவைக் கேட்பதில்தான் அவளுக்கு எவ்வளவு சந்தோசம்?! சிரிப்பாக வந்தது.

"ம்.. முதல்லை சுகமாயிருக்கிறாயா? சாப்பிட்டியா? இதுக்கு பதில சொல்லு.."

வெள்ளி, 10 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 14

"அண்ணா! என்ன சொல்லுறாய்? உண்மையாய் அப்பிடிச் செய்தாளா?"

"ம்.. பொய்யா சொல்லுறேன்.. நேற்று சுஜி வந்து தன்ரை 'ஐடி'ய 'மிஸ்யூஸ்'பண்ணிட்டாள் எண்டபோது என்னாலைகூடத்தான் நம்ப முடியேலை..

வியாழன், 9 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 13

"ஹேய்! கூ ஆர் யூ, மான்?"

துப்பாக்கி ரவையாகப் புறப்பட்டு வந்த வார்த்தைகள் என் நெஞ்சைத் துளைத்துச் சிரசைத் தாக்கியதுபோல் உணர்வு பொங்கியது. கனமான வலியுள் புதைந்து அவதிப்பட்டேன்.

செவ்வாய், 7 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 12

சாருவின் முகத்தில் சிறுவாட்டம்.

ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். எதிரே தொலைக்காட்சியில் ஏதோ ஒரு தமிழ்ப்பாடலுக்கு குலுங்கி நெளிந்துகொண்டிருப்பவர்களை கவனிக்கும் நிலையில் அவளில்லை என்பது அப்பட்டமாகவே தெரிந்தது.

'சற்' உலகம் என் மனச் சுமைகளைக் கூட்டி, என்னை நிம்மதியற்றவனாக்கி அலைக்கழிப்பதால் எனக்கும் ஒரு வடிகால் தேவையாக இருந்தது.

திங்கள், 6 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 11

"நீ சரியான மொக்குச் சாம்பிராணி.. உனக்குக் கொஞ்சங்கூடப் புத்தியில்லை.. சரியான வெங்காயம்.. எதை யாரிட்டை சொல்லக்கூடாதெண்டு தெரியேலை.. எத்தனை வயதெண்டாய்.. இருபத்தாறோ.. வயது வளர்ந்தளவுக்குப் புத்தி வளரேலை.."

ஜோதிதான்... மெசன்சரில் பொரிந்து தள்ளினாள்.

வார்த்தைகளில் அனல் பறந்தது.

"நீ செய்த வேலையாலை அவள் என்னோடை சண்டை.. உன்னை யார் சொன்னது அவளிட்டை கேட்கச் சொல்லி.. இனி என்னோடை பேசமாட்டனெண்டு ரெலிபோனை அடிச்சு வைச்சுட்டாள்.. அவள் சரியான பிடிவாதக்காரி.. இனி அவளை சமாதானப்படுத்தேலாது..எல்லாம் உன்னாலைதான்.. வெண்ணெய்.. சரியான வெண்ணைய்.."

சனி, 4 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 10

ஏனோ தெரியவில்லை. அவன்மேல் எரிச்சல் ஏற்பட்டது என்னவோ உண்மைதான்.

அந்த 'லவ்லிபோய்' மேல்தான்.

'அவள் எனக்குமட்டுமே... எனக்காகவே' என்ற சுயநலம் என்னுள் புகுந்துகொண்டது.

வெள்ளி, 3 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 9

திடீரென விழிப்பு வந்தது.

நேரத்தைப் பார்த்தேன். அதிகாலை இரண்டு மணி.

எங்கும் மயான அமைதி.. என் மனதைத் தவிர.

வியாழன், 2 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 8

சாருவின் முகத்தில் பூரிப்புப் பொங்கி வழிந்தது. அடிக்கடி தோளில் அலையாகப் புரண்ட கூந்தலை வலக்கரத்தால் ஒதுக்கியவாறு, எனக்கெதிரே அமர்ந்தவாறு என்னையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"என்ன அப்படிப் பார்க்கிறாய் சாரு..?"

"ம்.. இன்றைக்காலும் இப்பிடி வர ஒரு 'சான்ஸ்' கிடைச்சுதே.. அதுதான்.."

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 7

கடந்த இரண்டு நாட்களாகவே அம்மா சந்தோசமாக இயங்கிக் கொண்டிருந்தாள்.

சாரு குடும்பம் வந்த சந்தோசம் அவளுக்கு.

புதன், 1 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 6

மனது ஒரு நிலையில்லை.

'எது உண்மை, எது பொய்' எனப் புரியவில்லை.

'யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது' எனத் தெரியவில்லை.

எல்லாமே பொய்யா?!

எல்லாம் என்றால்... மனிதன்.. அவனைச் சுற்றியுள்ள அசையும் அசையாப் பொருட்கள்... பேசும் பேசாப் பொருட்கள்.. யாவுமே பொய்யா?!

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 5

"போகணும்.."

"என்னடி நீ... வந்த உடனை போகணும் போகணும் என்று... வராமலே இருந்திருக்கலாம்.."

"சரி.. இனிமேல் வரலை.."

திங்கள், 29 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 4

"அண்ணா... எனக்கு வாழவே பிடிக்கேலை.."

சுதா இப்படித்தான் சொன்னாள்.

பகிடிக்குச் சொல்லுகிறாளோ?

"ஏன்.. உனக்கு இப்ப எத்தினை வயது..?"

"இருபத்து மூன்று.."

"இருபத்து மூன்று வயதிலை வாழப் பிடிக்கேலையோ.. என்ன விளையாடுறியோ?"

உலகின் பல நாடுகளில் பஞ்சத்துக்குள்ளும் பிணிகளுக்குள்ளும் போராட்டங்களுக்குள்ளும் மனித உயிர்கள் வாழ்வதற்காக முயற்சித்தலையே வாழ்வாகக் கொண்டிருக்கும்போது... வளமான வசதியான நாடான கனடாவில் வசிப்பவளுக்கு இருபத்து மூன்று வயதில் வாழப் பிடிக்கவில்லை.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 3

அவளேதான்... பிருந்தா..

வந்துவிட்டாள்.

'வருவாளா, வருவாளா' என்று கணணியின் முன்னால் காக்கவைத்து வந்துவிட்டாள்.

"ஜோ..!"

சனி, 27 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 2

ஜேர்மனிக்கு வந்து பத்து வருடங்கள்தான்.

பதினைந்து வயதுவரை ஊர் வாழ்க்கை. அதனால், ஊரில் சந்திகளில்... குட்டையான மதில்களில் குந்தியிருந்து வம்பளக்கும் இளைஞர்களைக் கண்டிருக்கிறேன்.

வயல்வெளி நடுவே அமைந்துள்ள நன்னீர் கிணறுகளைச் சுற்றிநின்று அரட்டையடிக்கும் இளம் பெண்களையும் கண்டிருக்கிறேன்.

வியாழன், 25 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 1

Monday, August 04, 2003
இது திங்கள்தோறும் அங்கம் அங்கமாக வளரப்போகும் தொடர்கதையாகும். இதைப் படிப்பவர்களது கருத்தையும் கவனத்திலெடுத்து கதை வளரும். இந்த தொடர்கதைக்கு அழகாக தலைப்புகள் அமைத்த அன்பிற்கினிய கரவை பரணி, இளைஞன் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இது யாழ் இணையத்துக்காக மட்டுமே எழுத ஆரம்பித்திருக்கும் வாராந்த தொடர்கதையாகும். உள்ளே உங்களை அன்புடன் அழைப்பது இராஜன் முருகவேல்.