வியாழன், 27 ஆகஸ்ட், 2015

யாகாவாராயினும் நாகாக்க!

எவரெவரோ வந்துபோகிறார்கள். என்னென்னவோ கதைக்கிறார்கள். சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதைக்கிறார்கள். பொருத்தமில்லாமல் அனுதாபப்படுகிறார்கள். வலிந்து ஆறுதல் கூறுகிறார்கள். அவசரமென்று உதவி கேட்கும்போது அலட்சியத்துடன் ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம் அழையா விருந்தாளிகளாக வந்துபோகிறார்கள். ‘ஏதாவது உதவி தேவையா?’ என்ற பாவனையில் விசாரித்துச் செல்கிறார்கள்.

அவர்களது செய்கைகளையும் நடவடிக்கைகளையும் அரைகுறையாகவாவது அவதானிக்க முடிகிறது. வியப்பாக இருக்கிறது. அவர்களைப்பற்றி அவள் தனக்குள் போட்டுத் தீர்மானித்த முடிவுகள் யாவும் அங்கே தடுமாறி, அவர்களின் புதிய முகங்களைத் தரிசிக்க நேரும் விந்தைகள் யாவும் புதியனவாக இருக்கிறது.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

அகத்தில் அரும்பிய ஆரூடம்

முடிவு ஆரம்பம், ஆரம்பம் முடிவு. ஆக்கம் அழிவு, அழிவு ஆக்கம். இரவு பகல், பகல் இரவு. ஒன்றின் எல்லையைத் தொட்டவாறு அதன் எதிர்மறையின் எல்லை. இந்த எல்லைகளின் விரிவும் சுருக்கமும் ஒரு உயிரினது சூழ்நிலையினது, மொத்தத்தில் உலகினது போக்கையே நிர்ணயிக்கின்றது. ஒவ்வொன்றின் முடிவும் தோற்றமும் வித்தியாசமானவை. அதேபோல் ஒன்றின் ஆக்கம் மற்றதின் ஆக்கத்தில் இருந்து வேறுபட்டது. அதேபோல் எல்லா இரவும் ஒரேமாதிரியானவையல்ல. பகலும் அவ்வாறே. அளவால் தன்மையால் வேறுபட்டவை. ஆனால் எல்லாம் ஆரம்பம்தான். முடிவுதான். ஆக்கம்தான் அழிவுதான். இரவுதான் பகல்தான்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

அதில் என்ன தவறு?!

வெள்ளைத்தோல்கள், பழுப்புத்தோல்கள், கறுப்புத்தோல்கள் எனப் பலதரப்பட்ட பன்னாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாகத் தாறுமாறாக- அவசர அவசரமாக வாகனங்களோடு வாகனங்களாக- இயந்திரகதியில் இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

அது பிறேமன் நகரின் பிரதான புகையிரத நிலையம். 

முன்வாசலில் வலப்புறமாக நிரையாக டக்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக இடத்துக்காக முன்நகர- அதை ஒட்டிய தொலைபேசிக் கூண்டுகளின் பக்கத்தில் நிரம்பி வழியும் சைக்கிள்கள்.

பியர் ரின்களுடன் தள்ளாடிவந்த இரண்டு செம்பட்டைப் பரட்டைத் தலைகள் முரட்டுச் சப்பாத்துக் கால்களால் முன்னால் நின்ற சைக்கிள்களில் ஒன்றை உதைத்து நெளித்து, தமது போதைக்குக் குறியீடு வைத்து நகர, சைக்கிள் உரிமையாளரின் வருகைக்காக அனாதையாய்க் கிடந்தது.

புதன், 22 ஜூலை, 2015

கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு

ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட 'தரப்படுத்தல்" என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.

வியாழன், 16 ஜூலை, 2015

ஆதியைத் தேடி ஆழியில் சயனம்!

(2004, டிசம்பர் 26ம் தேதி... சுலபமாக மறக்கக் கூடிய நாளா! உயிர்கள் பல குடித்து கடல் தன் வயிறு நிரப்பிய சுனாமி சோக நாளாயிற்றே! அதன் பாதிப்பில் அப்போது எழுதிய சிறுகதை.)

அது ஒரு ‘சொக்கலேற்’ தொழிற்சாலை. ஏறக்குறைய ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட தொழிலகம். அந்த நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்டுக் கூறக்கூடிய பெரிய தயாரிப்பு ஆலை.

பிற நாடுகளில் இருந்து பெரிய சதுரப் பாளங்களாக

வியாழன், 9 ஜூலை, 2015

சிறுதுளி

''அப்பா...!" என்று கூவியவாறு கையில் ஒரு கடதாசியுடன் ஓடிவந்தாள் சர்மிளா. 

பத்து வயது. என்னுடைய செல்ல மகள். இரண்டு பொடியங்களுக்குப் பிறகு பிறந்த பெட்டைப்பிள்ளை. அதனால் செல்லம் கொஞ்சம்கூட. பிள்ளைகளைத் தடியெடுத்து அதட்டினால் அவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களின் சுதந்திரத்திற்கு அவ்வளவு கட்டுப்பாடு கிடையாது.

அதுவும் சர்மிளாவுக்கு அறவே கிடையாது.

செவ்வாய், 7 ஜூலை, 2015

தனக்கென வேறு

மாலைநேரம். கீழ்வானத்துச் சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் யன்னல் கண்ணாடிகளால் பொசிந்து தரையை அலங்கரித்த செங்கம்பள விரிப்பில் மஞ்சள் கோலமிட்டன.

தொலைக்காட்சியில் திருமணவிழா ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பாலனும் அவனது மனைவி பிள்ளைகளும். நண்பன் பாலனுக்கு இரண்டு பிள்ளைகள். இருவருக்கும் ஆறு அல்லது ஏழு வயதுக்குள்தான்.

கடை ஒன்றினுள் சந்தித்தான் பாலன்.