தொலைபேசி அலறியது.
இரவு வேலையால் வந்த அலுப்பு கண் இமைகளை அழுத்தி எரிச்சலாக்கியது.
படுக்கையில் இருந்து எழ மனமில்லை.
தொலைபேசி விடாமல் அலறியது.
’யாராக இருக்கும் இந்த நேரத்தில்?!’
’நிம்மதியாகத் தூங்கக் கூட விடமாட்டாங்கள்!’
’சுள்’ளென்று கோபம் எட்டிப்பார்க்க, தொலைபேசியை நோக்கிக் கையை நீட்டினான்.
"ஹலோ! ஆர் சிவராசனே?"
"ஓமோம்.... நீங்கள் ஆர் கதைக்கிறியள்?"





