வியாழன், 10 டிசம்பர், 2015

தாலாட்டு - நினைவுத்துளி 03

ப்ப எல்லாம் வெளிநாடுகளில எங்கடை தமிழ் தாய்மார் தாலாட்டு பாடுறதே இல்லை எண்டுதான் நினைக்கிறன். அப்பிடி தாலாட்டு எண்டொரு சமாச்சாரம் இருக்கெண்டதே அவைக்குத் தெரியுமோ, தெரியாது.

இஞ்சை பிறக்கிற பிள்ளையள் தாங்களா விரும்பி தமிழை கதைக்கிறேல்லை எண்டு சொல்லீனம். அது ஞாயம்தான். பிறந்தோடனை தாலாட்டுக் கேட்டு வளந்த பிள்ளையள் தாங்களா விரும்பி தமிழ்ழை கதைக்கேலை எண்டு சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டன். ஏனெண்டால் தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டுமெண்டு சும்மா சொல்லி வைக்கேலை.

பிறந்த உடனை ரேடியோவிலையோ.. ரீவீலையோ சினிமாப் பாட்டைப் போட்டுவிட்டால்.. அதுகளுக்கும் தாங்களா தமிழ் சினிமா பாட்டையோ படத்தையோ.. கேக்குறத்துக்கோ பாக்குறத்துக்கோ வாற அக்கறை… தமிழ்ல கதைக்குறத்துக்கு வாறேல்லை…!

சில தாய்மார் சொல்லுவினம்.. எங்களுக்கு பாடத் தெரியாது..
எங்கடை குரலைக் கேட்டால் குழந்தை மேலும்மேலும் அழுமெண்டு.. ஒரு குழந்தைக்கு அதன் அம்மாவின் அன்பும் அரவணைப்பும் எவளவு முக்கியமோ.. அப்பிடித்தான் அதன் அம்மாவின் குரலும்.. எவளவுதான் பெரிய பாடகர்கள் பாடினாலும் ஒரு குழந்தைக்கு அதன் தாய் பாடும் பாடல்தான் அமுத கானம்…

என்ர அம்மாவும் எனக்கு தாலாட்டும் பாடுவா.. தாலாட்டு மாதிரி ரண்டு சினிமா பாட்டும் பாடுவா… நல்லா ஞாபகத்தில இருக்கு.. அதில ஒரு பாட்டில சில வரிகள் அப்பிடியே எனக்கும் பொருந்துற மாதிரியும் இருக்கும்.. பொருந்தாத மாதிரியும் இருக்கும்.

மாமன்மார் மூவர் தம்பி - நல்ல
வாழ்வளிக்க வருவார் - உனக்கு
மாமன்மார் மூவர் தம்பி - நல்ல
வாழ்வளிக்க வருவார்

ஹா ஹா ஹா… அம்மாவுக்கு தனது சகோதரங்களில அப்பிடி ஒரு நம்பிக்கையாக்கும்

இன்னொரு பாட்டு.. அதைப்பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில சொல்லுறன்.. இப்ப இந்தப் பாட்டக் கேப்பம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!