புதன், 22 ஜூலை, 2015

கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு

ழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட 'தரப்படுத்தல்" என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.

வியாழன், 16 ஜூலை, 2015

ஆதியைத் தேடி ஆழியில் சயனம்!

(2004, டிசம்பர் 26ம் தேதி... சுலபமாக மறக்கக் கூடிய நாளா! உயிர்கள் பல குடித்து கடல் தன் வயிறு நிரப்பிய சுனாமி சோக நாளாயிற்றே! அதன் பாதிப்பில் அப்போது எழுதிய சிறுகதை.)

து ஒரு ‘சொக்கலேற்’ தொழிற்சாலை. ஏறக்குறைய ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட தொழிலகம். அந்த நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்டுக் கூறக்கூடிய பெரிய தயாரிப்பு ஆலை.

பிற நாடுகளில் இருந்து பெரிய சதுரப் பாளங்களாக

வியாழன், 9 ஜூலை, 2015

சிறுதுளி

''அப்பா...!" என்று கூவியவாறு கையில் ஒரு கடதாசியுடன் ஓடிவந்தாள் சர்மிளா. 

பத்து வயது. என்னுடைய செல்ல மகள். இரண்டு பொடியங்களுக்குப் பிறகு பிறந்த பெட்டைப்பிள்ளை. அதனால் செல்லம் கொஞ்சம்கூட. பிள்ளைகளைத் தடியெடுத்து அதட்டினால் அவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவர்களின் சுதந்திரத்திற்கு அவ்வளவு கட்டுப்பாடு கிடையாது.

அதுவும் சர்மிளாவுக்கு அறவே கிடையாது.

செவ்வாய், 7 ஜூலை, 2015

தனக்கென வேறு

மாலைநேரம். கீழ்வானத்துச் சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் யன்னல் கண்ணாடிகளால் பொசிந்து தரையை அலங்கரித்த செங்கம்பள விரிப்பில் மஞ்சள் கோலமிட்டன.

தொலைக்காட்சியில் திருமணவிழா ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பாலனும் அவனது மனைவி பிள்ளைகளும். நண்பன் பாலனுக்கு இரண்டு பிள்ளைகள். இருவருக்கும் ஆறு அல்லது ஏழு வயதுக்குள்தான்.

கடை ஒன்றினுள் சந்தித்தான் பாலன்.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

பெயர் ஒன்று வேண்டும்!

ருளம்பலம் அண்ணருக்கு மனதில் ஒரு பெரிய கவலை! ஜேர்மனிக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகியும் அவரது நீண்டநாள் ஆசையொன்று நிறைவேறாமலேயே இருக்கின்றது.

அந்த ஆசை....

‘பெவுக்னிஸ்’ விசாவுடன் ஸ்ரீலங்காவுக்குச் சுற்றுலாப்போய் வரவேண்டும் என்பதல்ல.
சோசல்காசில் இருந்து களவாக வேலைசெய்து வட்டிக்குக் கொடுத்துவரும் குட்டியால் தொந்தியை நிரப்பவேண்டும் என்பதும் அல்ல.

அப்படி என்னதான் ஆசை...?!

சனி, 4 ஜூலை, 2015

கூண்டுப்பறவை

கூண்டினுள் சோகமே வடிவாக அமர்ந்திருந்தன அப்பறவைகள். ­"லவ் பேர்ட்ஸ்". காதல் பறவைகள். கூண்டைத் திறந்து விரல்களைக் குவித்து, கையை உள்ளே நீட்ட, அதில் தாவி அமர்ந்துகொண்டது காதல் சோடியில் ஒன்று. அலகைத் தாழ்த்தி அவனது கரத்தை மென்மையாகக் கொத்தி, மீண்டும் அவனது முகத்தில் ஏதோ தேடி.... மறுபடியும் கையை உற்றுப் பார்ப்பதுமாக....

அவனது முகத்தில் முகிழ்த்த உணர்ச்சிரேகைகளையும், கரத்தின் ரேகைகளையும் ஒப்பிட்டு, எதிர்காலத்துக்குப் பதில் தேடுகிறதோ?