புதன், 19 ஜூன், 2013

கரப்பொத்தானியம்

செங்கற்களாலான பழையது என்றோ, புதியது என்றோ கூற முடியாத நடுத்தரக் கட்டிடம். சீமெந்தால் அழுந்திப் பூசாமல், செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சீமெந்தால் ஒட்டியதுபோன்ற வெளித் தோற்றச் சுவர்களாலான கட்டிடம். மூன்று மாடிகள். ஒவ்வொரு மாடியிலும் மும்மூன்றாக மொத்தம் பன்னிரண்டு வீடுகள் அந்தக் கட்டிடத்துக்குள் அடக்கம். அதில் ஒரு வீடு வெறுமையாக இருப்பதாகக் கேள்விப்பட்டு, வெளிநாட்டவருக்கு, அதுவும் ஆசிய நாட்டுக் கறுப்பினத்தவனுக்கு

வெள்ளி, 31 மே, 2013

பொசுங்குக போலிகள்!

பிராங்பேர்ட் விமானநிலையம்.

விமானங்களின் போக்குவரத்து விபரங்களை விளம்பும் அறிவிப்புப் பலகையை நோட்டமிட்டவாறு அமர்ந்திருந்தாள் சுதா.

பல்வேறு நாட்டவர்கள் புரியாத மொழிகளில் உரையாடியவாறு, சக்கரங்கள் பூட்டிய 'சூட்கேஸ்'களை இழுத்தவாறு அவளைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.

வியாழன், 30 மே, 2013

மறுவிசாரணை

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. அதேபோல, தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவனை அம்மாவின் கடிதம் உசுப்பிவிட்டு, தற்போது "உணவு செல்லவில்லை சகியே, உறக்கம் கொள்ளவில்லை" என்ற நிலை. நந்தகுமாரன். செல்லமாக நந்தன். ஜேர்மனிக்கு வந்து பத்து வருடங்கள் இருக்குமா? இருக்கும். வசதியாக உள்ளானா? உள்ளான்.

புதன், 29 மே, 2013

கருகிய மொட்டுக்கள்

தவைத் திறந்து புன்னகையுடன் வரவேற்றவளைப் பார்த்துப் பிரமித்துவிட்டேன். எவ்வளவு மாறிவிட்டாள். கடைசியாக இவளைச் சந்தித்துப் பத்து வருடங்களாவது இருக்கும்.

அன்று நாற்றுமேடையாக இருந்த நிலம் பூவும் பிஞ்சும் காய்களும் கனிகளும் விளைந்த தோட்டமாகியது. பெரிய மனுசியாகிவிட்டாள். கன்னக்கதுப்புகளில் திரண்ட தசைகளில்கூட பெரிய மனிதத்தனம் பளிச்சிட்டது.

"உள்ளுக்கு வாங்கோ!" என்று என்னை வரவேற்றாள்.

செவ்வாய், 28 மே, 2013

நாயிசம்


காலை நேரம். இருளை முற்றுமுழுதாக விரட்டியோட்டும் முயற்சியில் களைத்த கையாலாகாத்தனத்துடன் ஏதோ பகல்பொழுதுதான் எனக் காட்ட விளைந்துகொண்டிருந்தது வெளிச்சம்.

பாடசாலைகளை நாடியோடும் பட்டாளங்கள், வேலைக் களங்களை நோக்கி விரையும் கூட்டங்களென அந்த வீதி பரபரப்பாக இரைந்துகொண்டிருந்தது.

திங்கள், 27 மே, 2013

நாளைக்காக இன்றா?!

ன்னால் நம்ப முடியவில்லை. இந்த ஐரோப்பிய மண்ணில் இப்படியானதொரு நிகழ்வு இடம்பெறுமா? - என்பதை இற்றைவரை நான் நினைத்துப் பார்த்ததில்லை. அதனால்தான் என்னால் நம்பமுடியவில்லை.

'நீ நம்பித்தான் ஆகவேண்டும். எங்களை ஒருமுறை உற்றுப் பார். எவ்வளவோ கனவுகளுடனும் எதிர்காலத் திட்டங்களுடனும் ஜேர்மனியை மிதித்தோம்....

வெள்ளி, 24 மே, 2013

வாசம் இழந்த மலர்கள்

செந்தணலாக ஜொலித்துச் சிவந்திருந்தது மாலைநேரத்து வானம். சூரியனின் அஸ்தமனத்தின் முன்னே தினமும் வானத்தில் நிகழும் போராட்டத்தால் பீறிட்டெழும் செந்தணல் ஒளிக்கீற்றுக்கள் வரிவரியாக முகில் கூட்டங்களில் பட்டுத் தெறிக்கும் காட்சி அது.

நாளை சூரியன் மீண்டும் உதிப்பான். மீண்டும் மறைவான். அப்போது வானம் மீண்டும் இரத்தச் சிவப்பாகிக் களரியாகும். இதேபோல் தாயகத்தில் எத்தனையோ உயிர்கள் விடுதலைத் தீயில் மரணிக்கின்றன. அவற்றின் மறைவு தமிழ் மண்ணை இரத்தத்தால் நனைக்கும். அந்த இரத்தப் பதிவுகள் காயும் முன்னே பல்லாயிரம் மக்கள் விடுதலை வேள்விக்காய்த் தோற்றமாவார்கள்.

வியாழன், 23 மே, 2013

விசவித்துகள்!


டும் இருட்டு. எங்கு நோக்கினாலும் எதையுமே பார்க்கமுடியாத அப்படியொரு இருட்டு என் முன்னால் நீண்டு விரிந்துகொண்டிருந்தது. உற்றுப் பார்த்து எதையாவது உணர முற்படும்போது, அந்த இருட்டுக்குள் பற்பல அமிழ்ந்திருப்பதுபோலவும், இல்லாததுபோலவும் ஒரு நிச்சயமற்ற சூன்யமான தன்மை என்னைச் சுற்றிலும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.

புதன், 22 மே, 2013

சாகாவரம்

தவைத் திறந்துகொண்டு குளியல் அறையைவிட்டு வெளியே வந்தாள் சகுந்தலா..

இன்னும் சிறிதுநேரத்தில் சந்திரன் வேலையால் வந்துவிடுவான். அதற்குள் எல்லாவற்றையும் தயாராக்கவேண்டும். இல்லையேல் மூக்குநுனியில் கோபம் சிவப்பாக இனம்காட்ட, சந்தர்ப்பம் சூழ்நிலைகளை மறந்து கத்த ஆரம்பித்துவிடுவான்.

செவ்வாய், 21 மே, 2013

விரிசல்

ன்று ஒரு கலைமன்றத்தின் ஆண்டுவிழா.

மேடையில் ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி, கழுத்தில் தொங்கிய மலர்மாலை கொடுத்த பூரிப்புடன் வெளிநாட்டவர்களுக்குச் சார்பாக உரையாற்றிக் கொண்டு இருந்தாள்.

அவளின் பேச்சில் தமக்கேதோ பல சலுகைகள் கிடைத்துவிட்டன அல்லது கிடைத்துவிடும் என்றமாதிரி கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள் அங்கு கூடியிருந்த தமிழர்கள்.

திங்கள், 20 மே, 2013

எனக்கு எல்லாம் தெரியும்

''உங்களுக்கேன் இந்தத் தேவையில்லாத வேலை?"

கடந்த சில மாதங்களாகவே இந்த வசனத்துடன் துளைத்தெடுக்க ஆரம்பித்துவிடுவாள் மனைவி விமலா.

நாங்கள் திருமணம் என்ற பந்தத்தால் சொந்தமான இந்தப் பத்து வருடங்களாக, எமது குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகளே வந்ததில்லை என்று கூறமுடியாது.

ஞாயிறு, 19 மே, 2013

நிதர்சனம்

து ஒரு சேரிப்புறம். பாட்டாளிவர்க்கத்தின் அரண்மனைகள் குடிசைகளாகத் தெரிகின்றன. காலச் சக்கரங்களின் சுழற்சியில் அவைகள் தேய்வதைப்போல பஞ்சம் பட்டினியில் அவர்கள் வாழ்வும் தேய்கிறது.

வள்ளி.... கைம்பெண். துணையாக ஒரு பாலகன். ஆறுதலுக்கும் அரவணைப்புக்கும் அந்தப் பிஞ்சுதான் தஞ்சம்.

சனி, 18 மே, 2013

ஐயாயிரம் மார்க் அம்மா!

'மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு..."

சௌந்தரராஜன் தனது குரல்மூலம் தத்துவங்களைப் பரப்பிக் கொண்டிருந்தார்.

அந்தக் காரினுள் எல்லோரது முகத்திலும் ஒருவித இறுக்கம் வியாபித்திருந்தது. இடையிடையே எழும் கோமதியின் விசும்பல் சத்தத்தைத் தவிர, அங்கே அமைதி குடிகொண்டிருந்தது. அதை விரட்டும் முயற்சியில் அந்தக் காரின் சிறிய 'ரேப் றெக்கோட'ரில் இருந்து சௌந்தரராஜனின் குரலில் தத்துவப்பாடல்கள் ஈடுபட்டிருந்தன.

வியாழன், 16 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானே - நிறைவங்கம் (20)

வீடே முற்றிலும் மாறிவிட்டது.

சாருவின் முகத்தில் குதூகலப் பொலிவு. துள்ளியோடும் மானாகிவிட்டாள். அதைக் கண்டு அம்மாவுக்கு வாயெல்லாம் பல். கூடியளவு என்னையும் சாருவையும் தனிமையில்விட்டு, பெரிசுகள் ஒதுங்க ஆரம்பித்தார்கள்.

புதன், 15 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 19

ணனித்திரையையே சில வினாடிகள் பார்த்தவள் என்னை நோக்கித் திரும்பினாள். அவளது முகத்தில் நான் எதிர்பார்த்த அதிர்ச்சியோ கவலையோ எதையுமே காண முடியவில்லை. மாறாக ஆச்சரியத்தால் கண்கள் கருவண்டுகளாக உருள நின்றாள்.

"அத்தான்.. இந்தப் போட்டோ எப்பிடி உங்களுக்கு வந்திச்சு..?"

செவ்வாய், 14 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 18

ணையம் வந்த பிறகு உலகம் வெகுவாகச் சுருங்கிவிட்டது என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் அந்தக் கூற்று என்மட்டில் இவ்வளவுதூரம் உண்மையாகும் எனக் கனவிலேகூட நினைத்துப் பார்த்ததில்லை.

உலகம் ஒரு நாடாக, ஊராக, வீதியாக, வீடாகக் குறுகிவிட்டது என்மட்டில். அதற்குச் சான்றாக கணனித் திரையில் அவளது படம்.. லவ்லிபோய் அனுப்பிய அவளது படம் கணனித்திரையில் மிதந்து என் மனதை ஆறா ரணமாக்கி, குருதி ஊற்றை உருவாக்கிக் கொண்டிருந்தது.

திங்கள், 13 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 17

"அண்ணா.."

"ம்.."

"பெட்டைகளை நம்பாதைடா.. பொடியங்களின்ரை உணர்ச்சிகளைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கவெண்டே ஒரு கூட்டம் அலையுது..." என்று அறிவுரை கூறினான் லவ்லிபோய்.

ஞாயிறு, 12 மே, 2013

தாயே! தாயே!!


யிரு திங்கள் சுமந்தெனை யீன்று
பவ்விய மாகக் காத்தாயே

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 16

னக்குள் புதிதாக ஒரு போராட்டம் ஆரம்பமாகிவிட்டது.

'சாரு என்னை விரும்புகிறாள். அதற்கும்மேலாக அம்மா எங்கள் இணைவை விரும்புகிறாள்..'

தெரிந்த விசயம். எனினும் எனது எண்ணத்தை, நான் சாருவின்மேல் கொண்ட

சனி, 11 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 15

"அண்ணாக்குட்டி! சுகமா இருக்கியா.. பதில்.. பதில்.."

வந்த உடனேயே ஆரம்பித்துவிட்டாள். எனது முடிவைக் கேட்பதில்தான் அவளுக்கு எவ்வளவு சந்தோசம்?! சிரிப்பாக வந்தது.

"ம்.. முதல்லை சுகமாயிருக்கிறாயா? சாப்பிட்டியா? இதுக்கு பதில சொல்லு.."

வெள்ளி, 10 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 14

"அண்ணா! என்ன சொல்லுறாய்? உண்மையாய் அப்பிடிச் செய்தாளா?"

"ம்.. பொய்யா சொல்லுறேன்.. நேற்று சுஜி வந்து தன்ரை 'ஐடி'ய 'மிஸ்யூஸ்'பண்ணிட்டாள் எண்டபோது என்னாலைகூடத்தான் நம்ப முடியேலை..

வியாழன், 9 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 13

"ஹேய்! கூ ஆர் யூ, மான்?"

துப்பாக்கி ரவையாகப் புறப்பட்டு வந்த வார்த்தைகள் என் நெஞ்சைத் துளைத்துச் சிரசைத் தாக்கியதுபோல் உணர்வு பொங்கியது. கனமான வலியுள் புதைந்து அவதிப்பட்டேன்.

செவ்வாய், 7 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 12

சாருவின் முகத்தில் சிறுவாட்டம்.

ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். எதிரே தொலைக்காட்சியில் ஏதோ ஒரு தமிழ்ப்பாடலுக்கு குலுங்கி நெளிந்துகொண்டிருப்பவர்களை கவனிக்கும் நிலையில் அவளில்லை என்பது அப்பட்டமாகவே தெரிந்தது.

'சற்' உலகம் என் மனச் சுமைகளைக் கூட்டி, என்னை நிம்மதியற்றவனாக்கி அலைக்கழிப்பதால் எனக்கும் ஒரு வடிகால் தேவையாக இருந்தது.

திங்கள், 6 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 11

"நீ சரியான மொக்குச் சாம்பிராணி.. உனக்குக் கொஞ்சங்கூடப் புத்தியில்லை.. சரியான வெங்காயம்.. எதை யாரிட்டை சொல்லக்கூடாதெண்டு தெரியேலை.. எத்தனை வயதெண்டாய்.. இருபத்தாறோ.. வயது வளர்ந்தளவுக்குப் புத்தி வளரேலை.."

ஜோதிதான்... மெசன்சரில் பொரிந்து தள்ளினாள்.

வார்த்தைகளில் அனல் பறந்தது.

"நீ செய்த வேலையாலை அவள் என்னோடை சண்டை.. உன்னை யார் சொன்னது அவளிட்டை கேட்கச் சொல்லி.. இனி என்னோடை பேசமாட்டனெண்டு ரெலிபோனை அடிச்சு வைச்சுட்டாள்.. அவள் சரியான பிடிவாதக்காரி.. இனி அவளை சமாதானப்படுத்தேலாது..எல்லாம் உன்னாலைதான்.. வெண்ணெய்.. சரியான வெண்ணைய்.."

சனி, 4 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 10

னோ தெரியவில்லை. அவன்மேல் எரிச்சல் ஏற்பட்டது என்னவோ உண்மைதான்.

அந்த 'லவ்லிபோய்' மேல்தான்.

'அவள் எனக்குமட்டுமே... எனக்காகவே' என்ற சுயநலம் என்னுள் புகுந்துகொண்டது.

வெள்ளி, 3 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 9

திடீரென விழிப்பு வந்தது.

நேரத்தைப் பார்த்தேன். அதிகாலை இரண்டு மணி.

எங்கும் மயான அமைதி.. என் மனதைத் தவிர.

வியாழன், 2 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 8

சாருவின் முகத்தில் பூரிப்புப் பொங்கி வழிந்தது. அடிக்கடி தோளில் அலையாகப் புரண்ட கூந்தலை வலக்கரத்தால் ஒதுக்கியவாறு, எனக்கெதிரே அமர்ந்தவாறு என்னையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"என்ன அப்படிப் பார்க்கிறாய் சாரு..?"

"ம்.. இன்றைக்காலும் இப்பிடி வர ஒரு 'சான்ஸ்' கிடைச்சுதே.. அதுதான்.."

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 7

டந்த இரண்டு நாட்களாகவே அம்மா சந்தோசமாக இயங்கிக் கொண்டிருந்தாள்.

சாரு குடும்பம் வந்த சந்தோசம் அவளுக்கு.

புதன், 1 மே, 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 6

னது ஒரு நிலையில்லை.

'எது உண்மை, எது பொய்' எனப் புரியவில்லை.

'யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது' எனத் தெரியவில்லை.

எல்லாமே பொய்யா?!

எல்லாம் என்றால்... மனிதன்.. அவனைச் சுற்றியுள்ள அசையும் அசையாப் பொருட்கள்... பேசும் பேசாப் பொருட்கள்.. யாவுமே பொய்யா?!

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 5

"போகணும்.."

"என்னடி நீ... வந்த உடனை போகணும் போகணும் என்று... வராமலே இருந்திருக்கலாம்.."

"சரி.. இனிமேல் வரலை.."

திங்கள், 29 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 4

"அண்ணா... எனக்கு வாழவே பிடிக்கேலை.."

சுதா இப்படித்தான் சொன்னாள்.

பகிடிக்குச் சொல்லுகிறாளோ?

"ஏன்.. உனக்கு இப்ப எத்தினை வயது..?"

"இருபத்து மூன்று.."

"இருபத்து மூன்று வயதிலை வாழப் பிடிக்கேலையோ.. என்ன விளையாடுறியோ?"

உலகின் பல நாடுகளில் பஞ்சத்துக்குள்ளும் பிணிகளுக்குள்ளும் போராட்டங்களுக்குள்ளும் மனித உயிர்கள் வாழ்வதற்காக முயற்சித்தலையே வாழ்வாகக் கொண்டிருக்கும்போது... வளமான வசதியான நாடான கனடாவில் வசிப்பவளுக்கு இருபத்து மூன்று வயதில் வாழப் பிடிக்கவில்லை.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 3

வளேதான்... பிருந்தா..

வந்துவிட்டாள்.

'வருவாளா, வருவாளா' என்று கணணியின் முன்னால் காக்கவைத்து வந்துவிட்டாள்.

"ஜோ..!"

சனி, 27 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 2

ஜேர்மனிக்கு வந்து பத்து வருடங்கள்தான்.

பதினைந்து வயதுவரை ஊர் வாழ்க்கை. அதனால், ஊரில் சந்திகளில்... குட்டையான மதில்களில் குந்தியிருந்து வம்பளக்கும் இளைஞர்களைக் கண்டிருக்கிறேன்.

வயல்வெளி நடுவே அமைந்துள்ள நன்னீர் கிணறுகளைச் சுற்றிநின்று அரட்டையடிக்கும் இளம் பெண்களையும் கண்டிருக்கிறேன்.

வியாழன், 25 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 1

Monday, August 04, 2003
இது திங்கள்தோறும் அங்கம் அங்கமாக வளரப்போகும் தொடர்கதையாகும். இதைப் படிப்பவர்களது கருத்தையும் கவனத்திலெடுத்து கதை வளரும். இந்த தொடர்கதைக்கு அழகாக தலைப்புகள் அமைத்த அன்பிற்கினிய கரவை பரணி, இளைஞன் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இது யாழ் இணையத்துக்காக மட்டுமே எழுத ஆரம்பித்திருக்கும் வாராந்த தொடர்கதையாகும். உள்ளே உங்களை அன்புடன் அழைப்பது இராஜன் முருகவேல்.

வியாழன், 18 ஏப்ரல், 2013

மாறவில்லை

ரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது என்று வயோதிபர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் நான் ஊரின் பெயரையே சொல்லுவதாக இல்லை.

சும்மா ஒரு குறியீட்டுக்காக ஊர் அல்லது கிராமம் என்றே வைத்துக்கொள்ளுவோம். ஊர் அவ்வளவு பின்தங்கியும் இல்லை. அவ்வளவு முன்னேறியும் இல்லை- ஜேர்மனியில் பெண்விடுதலை என்று முழக்கமிடும் அநேகமான குடும்பப் பெண்களைப்போல.

பத்து வருட காலம்.

இந்த ஊரைவிட்டு ஜேர்மனிபோய், இப்போதுதான் மறுபடியும் இந்த ஊரை மிதிக்கவேண்டும் என்ற எனது எண்ணம் நனவாகியுள்ளது.

கடன்

மூன்று மாதங்களுக்குமேலாக ஊரிலிருந்து கடிதம் வரவில்லை. சனங்கள் என்னபாடுபடுகிறார்களோ தெரியவில்லை. காதுக்கு எட்டும் செய்திகள் பயமுறுத்தித் தினம்தினம் செத்துப் பிழைக்கவைக்கின்றன.

உண்மை எது பொய் எது என்று பகுத்தறிய முடியாத நிலை.

உறக்கம் வெகுநாளாய் மௌனமாகி இடையிடையே வந்து எட்டிப்பார்த்து வேடிக்கை காட்டுகிறது. பயங்கரமான கனவுகள் திகிலூட்டுகின்றன. உணவை நாட மனம் மறுத்தது. வேலை செய்யக்கூட முடியவில்லை.

வியாழன், 11 ஏப்ரல், 2013

யௌவனமில்லாத யதார்த்தங்கள்

னவுகளுடனும் கற்பனைகளுடனும், யாரிடமோ கடன் வாங்கி, ஜேர்மனியை மிதித்துச் சில காலம் சென்ற பின்புதான் தெரிகிறது- இங்கு வந்தது எவ்வளவு கேவலம் என்று.

'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்பார்கள். சுதாகரைப் பொறுத்தவரையில் அந்த வார்த்தை முற்றிலும் உண்மையானது. ஜேர்மனியிலிருந்த நண்பர்கள் எழுதிய கடிதங்கள் அவனின் கற்பனையைத் தூண்டின.

‘மச்சான்! வெள்ளைக்காரிகளுடன் கைகோர்த்துத் திரியலாம். வேலை எதுவும் செய்யாமல் படுத்திருந்தே காசு சம்பாதிக்கலாம். உடுப்புக்கூட வாங்கத் தேவையில்லை. ஆறுமாதத்துக்கு ஒருமுறை உடுப்பு வாங்கக் காசு தருவாங்கள். ரீவி வாங்கலாம். எப்படியாலும் இங்கே வந்து சேர். சொர்க்கம் சொர்க்கம் என்பார்களே, அது ஜேர்மனிதான்.’

திங்கள், 1 ஏப்ரல், 2013

மனவிகாரங்கள்

குளிரைப் பார்த்துப் பதறியடித்து இலைகளை உதிர்த்துவிட்டுப் பட்டுப்போனவைகளைப்  போன்ற தோற்றத்துடன் வீதியின் இருமருங்கும் அமைதியாக நிற்கும் மரங்களை மேலும் பயமுறுத்தும் நோக்கத்துடன் முண்டியடித்து முன்னேறும் வாகனங்கள், சோகத்துடன் குளிரைத் தாங்கும் மரங்களைத் தாண்டி ஆரவாரமாகச் சென்றுகொண்டிருந்தன. குளிரில் இருந்து உடம்பைப் பாதுகாக்கவென வாங்கியணிந்த உடைகளையும் மீறி நடுங்கியவாறு அருகிலிருந்த தேவாலய உச்சியில் தெரிந்த மணிக்கூட்டை அண்ணாந்து பார்த்தான் செந்தில்.

மணி சரியாக 4.50

மின்ரதம் (Electric Train) வர இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கின்றன.

ஞாயிறு, 24 மார்ச், 2013

ஆரம்பம்

வாழ்க்கையே அஸ்தமனமாகிவிட்டதுபோன்ற பிரமை சந்திரனை விழுங்கிய அமாவாசைகளாய் பௌர்ணமியை உதறித் தள்ளிவிடும்போல் இருந்தது. விதியின் கொடியகரங்கள் எந்த உருவத்தில் எதைச்செய்யும் என்று எவருக்குத் தெரியும்?அந்த வரிசையில் பரிமளா விதியின் வஞ்சகத்திற்கு இரையாகிவிட்டாள்.

அடிவயிற்றில் ஏதோ ஒரு பிரளயம். இன்னும் சிறிதுநேரத்தில் பிரளயம் எரிமலையாகிச் சுவாசக்குழாய்கள் வழியாகக்

ஞாயிறு, 10 மார்ச், 2013

அவரும் இவரும்..!

ந்த வானுயர்ந்த மாடிக்கட்டிடத்தின் முன்வாசல் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார் றொபின்சன்.

தனது எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற திடமான நம்பிக்கையுடன் சற்று நேரத்துக்கு முன்பு அந்த வீட்டினுள்ளே சென்றவர், அவை யாவுமே 'பொல, பொல'வென்று பூகம்பத்தால் சின்னாபின்னமாகிச் சிதறுண்ட கட்டிடங்களாகப் பொடிப்பொடியாகிவிட்ட அதிர்வுடன் திரும்பி வந்தார்.

புதன், 6 மார்ச், 2013

அந்தப் பக்கம் பாக்காதை!

''அந்தப் பக்கம் பாக்காதை..."
அவசரமாகக் கூறினான் மகேந்திரன்.

எந்தப்பக்கம் பார்க்க வேண்டாம் என்கிறான்?! பார்க்க வேண்டாமென்றால் பார்க்கத் துடிப்பதும், கேட்கக் கூடாதென்றால் கேட்க முயல்வதும், பேசத் தடை என்றால் பேச விளைவதும்தானே மனித இயல்பு?!

நானும் சாதாரண மனிதன்தானே? பார்க்கத் துடித்தேன். உடனே பார்த்தால், தனது வார்த்தையை மதிக்கவில்லையே என மகேந்திரன் மனதுக்குள் மறுகலாம். அதனால் வேறு திசையில் நோக்க ஆரம்பித்து, அப்படியே அரை வட்டவடிவமாக விழிகளை மெதுவாக அசைத்து அவன் குறிப்பிட்ட பக்கத்தைப் பார்க்கலாம் என்றொரு குறும்புத்தி எண்ணம் சிந்தையில் குறும்பாகச் சிரித்தது.