செவ்வாய், 30 ஏப்ரல், 2013

ஐஸ்கிறீம் சிலையே நீதானோ? - அங்கம் 5

"போகணும்.."

"என்னடி நீ... வந்த உடனை போகணும் போகணும் என்று... வராமலே இருந்திருக்கலாம்.."

"சரி.. இனிமேல் வரலை.."

"ஐயோ... நில்லடி.. ஓரு மணித்தியாலமாவது கதைக்கமாட்டியா? நீ ரொம்பவும் மோசம்டி... நான்தான் உன்னிலை ஆசை.. உனக்குக் கொஞ்சம்கூட ஆசையில்லை.."

"என்னடா ஆசை... பெரிய ஆசை... நான் படிக்கவேண்டாமா.. ஸ்கூல் ஹோம்வேர்க் செய்யவேண்டாமா.. உன்னோடை கதைச்சால் சரியா... ஹோம்வேர்க் செய்யாட்டி.. வீட்டிலை சொல்லிப்போடுவாங்கள்.. பிறகு.. மாடுமேய்க்கப் போடி என்று அம்மாவும் அப்பாவும் திட்டுவாங்கள்..."

"ஹே.. ஹே.. கனடாவிலை மாடு இருக்கா?"

"என்னடா சிரிப்பு.. கனடாவிலை மாடு இருக்கோன்னு யாருக்கு தெரியும்.. அவங்களுக்கு அப்பிடித்தான் திட்டத் தெரியும்.. லொள்.."

"வேறை எப்பிடித் திட்டுவாங்கள்..?"

"அதுதான் இப்ப முக்கியமா? அவங்கள் ஒவ்வொருநாளும் திட்டிக்கொண்டுதான் இருக்கிறாங்கள்.."

"ஐயோ.. உன்னையா.."

"இல்லைடா.. அப்பா அம்மாவை.. அம்மா அப்பாவை... டெய்லி சண்டை.."

"நான் நினைக்கிறேன்.. நீ பிறந்த உடனை திட்ட தொடங்கியிருப்பாங்க..."

"எப்பிடி சொல்லுறாய்..?"

"அதுதான் உனக்குச் சகோதரங்கள் இல்லை..."

"லொள்... போடா எம்மெம்.."

"ஒரு மணித்தியாலத்திலை பெரிசாய் என்னடி படிக்கப் போறாய்?"

"ஐயோ.. நான் போகணும்டா.."

"சரி போ.. போனால்.. இனி சத்தியமாய் நான் கொம்பியூட்டரை தொடமாட்டன்.."

"என்னடா நீ.. சுதாவோடை பேசலாம்தானே.. பாவம்டா அவள்.. வாழ்க்கையிலை சரியான கஸ்டம் அவளுக்கு.."

"ஐயோ.. உனக்கும் சொல்லிப்போட்டாளா.. எனக்குமட்டும் சொல்லுறன் என்று சொன்னாள்.."

"லொள்.. அவள் அப்பிடித்தான்... இப்பிடி கனபேருக்க சொல்லிப்போட்டாள்.."

இப்படி யாரிடமும் சொல்லாதே எனக் கூறி, கவலைகளை இறக்கிவைப்பதிலும் ஆறுதல் கிடைக்குமோ? அனுபவித்தவர்களுக்குத்தானே புரியும்?!

"என்ன இருந்தாலும் உன்னோடை கதைக்கிற சந்தோசம்போலை யாரோடை பேசினாலும் வராதுடா.."

"ஏன்டா..?"

"யாருக்குத் தெரியும்?"

"பொய் சொல்லாதை... நீ எதையோ மறைக்கிறாய்.. என்னோடை கதைக்கிறதிலை உனக்கு என்னடா சந்தோசம்..?"

'அப்படி என்ன சந்தோசம்?'

என்னையே கேட்டுக்கொண்டேன்.

'காதலா..?'

சிரிப்பாக இருந்தது.

அவள் யார் என்று தெரியாது... என்ன நிறம் என்று தெரியாது... அப்படியும் காதல் வருமா?

காணாமல் காதலா? சாத்தியமா?

உணர்வுகள்தானே உரையாடல்களாகின்றன. அந்த உணர்வுகள் விரல் நுனியில் வந்து விசைப்பலகையை அழுத்தி வார்த்தைகளை மெசன்சருக்கு உன்னும்போது காதல் என்பதும் காத்திரமாக உண்டாகிறதோ?

எனக்குப் புரியவில்லை.

"தரன்..."

"ம்..."

"சொல்லுடா..."

"என்ன நீ... என்ன சொல்ல..."

"என்னோடை கதைக்கிறதிலை உனக்கென்ன சந்தோசம்?"

"உண்மையை சொல்லட்டா.."

''ம்..''

"நான் உன்னை விரும்புறன்டா.."

"லொள்.."

"என்ன லொள்?"

"ஐயோ.. நீ சரியான எம்மெம்தான்டா... என்ரை மெசன்சர்லை எத்தனை பேருடைய 'ஐடி' இருக்கு தெரியுமா?"

"யாருக்கு தெரியும்..?"

"எழுபதுக்கு மேலை.."

"ஐயோ.. அவ்வளவு சனமா?"

"அதிலை அரைவாசி 'காய்ஸ்'"

"அதென்ன காய்ஸ் பழம்ஸ்.."

"உன்னைமாதிரி பொடியங்கள்டா.."

எனக்கு என்னவோபோலிருந்தது. என்னைப்போல முப்பத்தைந்து பொடியங்களுடன் பேசுகிறாளா? அவள்மீது சிறிது கோபம்கூட ஏற்பட்டது.

பொறாமையோ...?!

இருக்கலாம்.

"அவங்களோடை பேசிக்கொண்டு பிறகேன் என்னோடை கதைக்கிறாய்..?"

"என்னடா நீ... சின்னப்பிள்ளைமாதிரிக் கோபிக்கிறாய்... எனக்கு எல்லாரும் பிரண்ஸ்தானேடா.. ஆனால்..."

"என்ன ஆனால்..?"

"என்னவோ தெரியேலை... அவங்கள் 'ஓன்லைன்'லை இருந்தாலும்... நீ இருந்தால்... உன்னோடைதான் கதைக்கவேணும்போலை இருக்குடா..."

எனக்குள் எழுந்த கோபம் மாயமாய் மறைந்துவிட்டது.

உச்சியில் பாலாபிசேகம் அவள் வார்த்தைகளால் உற்பத்தியானது.

"எனக்காக சொல்லுறியா?"

"ஐயோ.. நம்புடா.."

"சரி நம்புறன்..."

"ஆனால் ஒன்று... சும்மா காதல் என்று நினைச்சுக் குழம்பாதை.. சொல்லிப்போட்டன்... பிறகு கவலைப்படுவாய்.."

"ஐயோ..."

"என்ன ஐயோ.."

"என்னை பொய் சொல்ல சொல்லுறியா.. நான் உன்னை விரும்புறன்டா... அதுக்காக உன்னை காதலிக்கச் சொன்னனா?"

"லொள்..."

"நீ அதுக்காக கதைக்காமை விட்டுடாதை... பிறகு விசர் பிடிச்சுடும்.."

"பிறகு என்னடா.. இப்பவே உனக்கு விசர்தான்டா... காதல் என்று கதைச்சால் பேசமாட்டன்.."

"அப்ப..?"

"சும்மா ஒரு சிநேகிதியோடை பேசுறமாதிரி கதை.."

"ஐயோ.. நீ அப்பிடி கதை..."

"லொள்.. என்னடா நீ... உப்பிடித்தான் இந்தியாலை இருந்து ஒருத்தன் என்ரை உயிரை வாங்குறான்.."

"அவன் யாரடி?"

"என்னை காதலிக்கிறன் என்று மெசன்சரிலை ஒரே கரைச்சல்... மெசன்சரிலை அவனை 'புளொக்'பண்ணினால்.. அடிக்கடி மெயில்... அதோடை 'வொய்ஸ் மெயில்' வேறை... "

"அவன் யார் என்று சொல்லு.. நல்ல பேச்சுக் கொடுத்துவிடுறன்..."

"லொள்.."

"ப்ளீஸ்டி... அவனோடை நான் பேசவேணும்... அவன் 'ஓன்லைன்' வந்தால் எனக்கு 'அட்'பண்ணு... ஓகே?"

"ஓம்டா.. என்ரை 'ப்ரண்ட்ஸ்' எல்லாரையும் உனக்கு 'அட்'பண்ணத்தானே போறேன்.."

"எழுபதுபேரையுமா...? அம்மாடியோவ்.. வேணாம்.. நீமட்டும்தான் வேணும்டா.."

"லொள்... தரன் குட்டி..!!!!"

"என்னடா.."

"கிட்ட வாடா.."

"கிட்டவா?!"

"லொள்... 'றைற்'லை ஒரு ம்மா... 'லெவ்ற்'லை ஒரு ம்மா.. லொள்.."

"ஹே.. ஹே.. என் பிருந்தாக் குட்டி கொஞ்சிட்டாள்... ரொம்பச் சந்தோசம்டி.."

"போடா..."

"ஐயோ... போகமாட்டன்.. தந்ததுக்கு பரிசு தரவேண்டாமா.. எங்கை அந்த அப்பிள் ரண்டையும் காட்டு..."

"நாயே.."

"அப்பிள் கன்னங்கள் ரண்டையும் காட்டுடி... ம்மும்மும்மா...."

"லொள்... அதென்னடா ம்மும்மா..?"

"அதுவா... ஹே.. ஹே.. குறைஞ்சது பத்து நிமிடத்துக்கு கொஞ்சுறேன்.."

"போடா... லொள்.."

"அது சரி... என்னை விரும்பாமை எப்படி ம்மா தருவாய்டி?"

"ஐயோ.. ஐ லைக் யூடா.. ஆனால் காதல் இல்லைடா.."

"என்னமோ... அந்த வில்லனுக்கு என்ன பெயர்டா?"

"வில்லனா?"

"அதுதான் உன்னை 'லவ்'பண்ணுறேன்னு தொந்தரவு தாறானே.. அவனுக்கு.."

"லொள்... லவ்லிபோய்.."

"லவ்லிபோயா... என்ன பெயர் இது?"

"சற் பெயர்டா.."

"கிழிஞ்சுது போ... எல்லாம் லூசுப் பெயர்கள்.."

"லொள்.. அப்ப என்ரை பெயர்கள்.."

"ஐஸ்... பிரின்செசின்.. அதுவா...?"

"ம்..."

"அது நல்ல பெயர்தான்... அதென்னடி 'ஐஸ்' என்று ஒரு பெயர்..?"

"எனக்கு ஐஸ்கிறீம் விருப்பம்டா.. ஒருநாளைக்கு நாலு தரம் சாப்பிடுவேன்.."

"இந்த பத்தொன்பது வயதிலா?"

"ஐஸ்கிறீம் சாப்பிட வயதென்னடா.. சின்னல்லை இருந்தே ஐஸ்கிறீம் என்றால் உயிர்டா.."

"அப்ப உன் உடம்பு சுவீற் என்று சொல்லு.."

"வாட்..?"

"உடம்பிலை எல்லாம் ஐஸ்கிறீமாத்தானே இருக்கும்?! அதுதான் சுவீற்.."

"லொள்.."

"கனடாவுக்கு ஓடிவந்து கடிச்சுப் பார்க்கணும்.."

"எதைடா?"

"உன் கையை.. ஐஸ்கிறீம் இனிக்குதா என்று.."

"போடா.. எம்மெம்.."

"அப்பிள் பெண்ணே நீதானோ.. ஐஸ்கிறீம் சிலையே நீதானோ.."

"லொள்.. முழுக்கப் பாடுடா.."

"இப்ப இல்லை.. ஒருநாள் பாடுறேன்.. சரியா?"

"என்னவோ.. ஏய் எம்மெம் செல்லம்... உனக்கு என்ரை மச்சாளை 'அட்'பண்ணட்டா?"

"மச்சாளா... ஐயோ... இப்பதான் ஞாபகம் வருது.. என்ரை மச்சாள் லண்டன்லை இருந்து வரப்போறாள்..."

"யார்டா அவள்.. எனக்கு நீ சொல்லேலை.."

"அம்மாடை தம்பி மகள்டா... பெயர் சாருலதா... சாரு என்று கூப்பிடுவோம்.. எல்லாரும் ரண்டு கிழமை இங்கை வந்து நிற்கப் போகிறார்களாம்.."

"அதுக்கு என்னடா..?"

"ஐயோ.. அவள் சரியான வால்... நான் 'சற்'பண்ணுறதை பார்த்தால் அவ்வளவுதான்.. எல்லாரிட்டையும் சொல்லிப்போடுவாள்.. அதுதான்டா பயமாக்கிடக்கு.."

"லொள்.."

"சிலவேளை ரண்டு கிழமை 'சற்'றுக்கு வராட்டில் கோபிக்காதை.. இப்பவே சொல்லிப்போட்டன்.. ஓகே..?"

"உன்னிலை கோபிப்பனாடா... லொள்.."

"எப்படியும் இன்ரர்நெற் கபேலை இருந்தாவது உன்னோடை கதைக்க 'ட்ரை'பண்ணுவேன்.."

"லொள்.. ஐயோ.. ரண்டு கிழமை கதையாமல் இரு.."

"என்னடி நீ.. அது சரியான கஸ்டம்டா.. அது சரி.. யார் உன்ரை மச்சாள்.. 'சற்' மச்சாளா?"

"உண்மையான மச்சாள்டா... 'ஒன்லைன்'லை நிக்கறாள்.. 'அட்'பண்ணவா?"

"ம்.. என்ன பெயர்டா அவளுக்கு..?"

"ஜோதி... ஹேய்.. அவளுக்கு முன்னாலை 'டீசன்டா' பேசணும்.. ஓகே..?"

"டீசன்டாதானே பேசுறேன்.."

"லொள்..."

எனது மெசன்சர் திரையில் ஜோதி புகுந்துகொண்டாள்.

"நீ... ஜோ... ஏய்! நீதான் என் மச்சாளை படிக்கவிடாமல் தொந்தரவுபண்ணுறதா.. முட்டாள்... எருமை... வெண்ணை... கவனம்டா... கொன்னுடுவேன்.."

நான் அதிர்ச்சியால் திகைத்துநின்றேன்.


-தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிகவும் நன்றி!